2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முப்படை தலைமை தளபதி உயிரிழந்தமை உறுதி

Freelancer   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்பதை இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர்  குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. 

சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .