2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு யுவதிக்கு ஜனாதிபதி பாராட்டு

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்

தந்தையை இழந்த நிலையில் சாதித்த   குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து  வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த யுவதியை ஜனாதிபதி  கௌரவித்தோடு அவருக்கு நினைவு  பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்

வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வில் வைத்து யுவதி ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X