2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூட்டைப்பூச்சியால் திரையரங்குக்கு பூட்டு

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள சினிமா திரையரங்கு ஒன்றை மூட்டைப்பூச்சிக் காரணமாக மூடுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சினிமா அரங்கில் உள்ள ஆசனங்களில் அதிகளவு மூட்டைப்பூச்சிகள் காணப்படுவதால் இதனை மூட நடவடிக்கை எடுத்ததாகவும், இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன் சினிமா அரங்கை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மூட்டைப்பூச்சிகளை அழித்து திரையரங்கை திறப்பதற்கு குறைந்தது 5 நாட்களாவது செல்லுமென்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .