Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
J.A. George / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புதுடெல்லிக்கு இன்று (27) விஜயம் செய்ய உள்ளார்.
அங்கு உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும், இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் பேச உள்ளனர்.
தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து தனது உரையில் விக்ரமசிங்க கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கபடுகின்றது.
கடந்த சில மாதங்களில் இந்தியாவுக்கு மூன்றாவது தடவையாக விஜயம் செய்யவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago