2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு: தாய் நஞ்சருந்தி இறப்பு

Editorial   / 2024 மே 03 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37 வயதான அவரது மனைவி பரமேஸ்வரி, நஞ்சருந்திய நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியின் வீடொன்றில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த தம்பதியர் இருவரும் முரண்பாடு காரணமாக சிலகாலங்கள் பிரிந்திருந்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கணவனின் தலையில் இரத்தக்காயம் இருக்கும் நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .