2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூளைசாலிகளின் வெளியேற்றம்: ஒக். 6 இல் விவாதம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் (மூளைசாலிகள்) நாட்டை விட்டு வெளியேறும் சமீபத்திய போக்கு குறித்து எதிர்வரும் ஒக்டோபர்  6ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X