2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மே 9 வன்முறை சம்பவங்கள்; சு.கவின் முக்கியஸ்தர் கைது

Nirosh   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிலியந்தலயிலும் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ நகரசபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலயில் இடம்பெற்ற 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கெஸ்பேவ மேயர் லக்ஷமன் பெரேராவின் வீட்டைத் தாக்கி சேதம் விளைவித்தமை, அவரது சகோதரியின் வீட்டைத் தாக்கியமை, காமினி லொக்குகே எம்.பியின் சகோதரரின் வீட்டைத் தாக்கியமை உள்ளிட்ட 6 வன்முறைச் சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .