2025 ஜூலை 19, சனிக்கிழமை

மேர்வினை ஆஜர்படுத்த உத்தரவு

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமாக நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை ஜூன் 30ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குக்கு ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதன்படி, வழக்கை ஜூன் 30ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அன்றைய தினம் மேர்வின் சில்வா சிறையில் இருந்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X