Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்ட கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு நாளை (26) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் அல்லது பொலிஸாருக்கு மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி நான்காயிரத்து 987 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி 12 ஆம் திகதி நிறைவடையவுள்ள சாதாரண தர பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago