2025 ஜூலை 05, சனிக்கிழமை

மேலும் 5 வருடங்கள் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை பதவி வகிக்குமாறு, மல்வத்து விகாரையின் அநுநாயக்க தேரர் இம்புல்கும்புரே ஸ்ரீ சரணாங்கர விமலதம்மாஹிதான தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதிலுள்ள 60 விகாரைகளுக்கு, வணக்கஸ்தல காணி உரித்தை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி தங்களின் பதவிக்காலத்தில் 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. மீதமிருப்பது 1 வருடமே. எனினும் அந்த ஒருவருடத்தின் பின்னரும் தாங்களே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக தங்களுக்கு வல்லமை கிடைக்கவேண்டுமென பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .