2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘மேல் மாகாணத்தில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 27 , மு.ப. 11:23 - 1     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களில் காணப்படும் சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு எதிர்வரும் நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென, மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தரங்களின்றி அமைக்கப்படும் கட்டங்கள் தொடர்பாகவும் கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பல இடங்கள் மழைக் காலங்களில் நீரில் மூழ்குவதற்கு இச்சட்டவிரோத கட்டடங்களே காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  சுவரொட்டிகள் ஒட்டுவதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள  இடங்களில் அறிவிப்பு மற்றும் சுவரொட்டிகளை ஒட்டாமல் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டும் நபர்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அழைத்து இந்த விடயம் குறித்து அறிவுரைகள் தன்னால் வழங்கப்பட்டுள்ளதென்றும், இது தொடர்பான சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 1

  • Mohamed Sunday, 27 January 2019 06:30 AM

    Very good idea pls keep it up teach other politicians also

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .