2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘ மைத்திரி அணியினர் அநாதரவாகியுள்ளனர்’

Kamal   / 2018 நவம்பர் 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், பொலன்னறுவையில் போட்டியிட உள்ளவர்களின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கும் முன்னாள் பிரதியமைச்சர் நளின் பண்டார, “இருப்பிடம் இல்லாது மைத்திரி அணியினர் அநாதராவாகியுள்ளனர்” எனவும் தெரிவித்தார். 

அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததோடு, அரசமைப்புக்கு முரணான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றார்.  

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும், பெரமுனவில் இணைந்து, பெரமுனவிலேயே தேர்தலை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் எனவும் கூறினார்.   அதேபோல, பொலன்னறுவை மாவட்டத்துக்கான, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாவும், அந்தப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரோ அல்லது அவரின் ஆதரவாளர்களின் பெயரோ இல்லை என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

அதனால், தற்போது மைத்திரி அணியினர் இருப்பிடம் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மைத்திரி அணி தேர்தலிலும் தோல்வியடையபோவது உறுதியாகிவிட்டது எனவும் தெரிவித்தார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .