Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 05 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முயன்ற பெண்ணுக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஒத்திவைத்த சிறைத்தண்டனையை விதித்துள்ளார்.
வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட செல்வகுமார் வேலமணி (வயது 62) என்ற பெண்ணுக்கே மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் மீது, 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தி படுகொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார் என்று, அந்தப் பெண்ணின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அக்குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே, அப்பெண்ணுக்கு மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்கு, 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்த நீதிபதி, அந்த தண்டனைக்கு மேலதிகமாக 25 ஆயிரம் ரூபாயை தண்டமாகவும் விதித்தார்.
தண்டப்பணத்தை செலுத்த தவறின், மேலதிகமாக ஆறுமாதங்களுக்கு சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago