Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷர்கள் படுகொலை சூழ்ச்சி குறித்து பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளில் இருந்து நாளாந்தம் திடுக்கிடும் பல தகவல்கள் வௌிவந்துகொண்டிருக்கின்றன. இதன்படி தற்போது நாலக டி சில்வா கொமாண்டோ பயிற்சியளிக்க கோரியமை தொடர்பான தகவல்கள் வௌிவந்துள்ளன.
பயங்கரவாத தடுப்புப் பிரவைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு கொமாண்டோ பயிற்சியளிக்குமாறு, அப்பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கேட்டுக்கொண்டதாக, விசேட அதிரடிப்படையின் அதிகாரியான எம்.ஆர்.லதிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்போது வழங்கியுள்ள வாக்குமூலத்திலேயே, விசேட அதிரடிப்படையின் அதிகாரியான எம்.ஆர்.லதிப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதியுடனே பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago