Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

"மொழிகளுக்கிடையிலான பன்முகத்தன்மையை நாம் ஒரு சவாலாகப் பார்க்காமல், மதிக்கப்பட வேண்டிய பலமாகப் போற்ற வேண்டும்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் இன்று (13) நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்:
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்குப் பிரதமர் இதன்போது சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ் (Andalib Elias), பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இராஜதந்திரிகள், சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான கலாசாரப் புரிதல் மற்றும் நட்பு இந்த அர்ப்பணிப்புகளின் மூலம் மேலும் வலுவடைந்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.






54 minute ago
58 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
3 hours ago
7 hours ago