Editorial / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனே: மஹாராஷ்டிராவில், மிகவும் அரியதாக கருதப்படும், 'மட்ஜியல்' வகையைச் சேர்ந்த ஓர் ஆட்டுக்கு, 70 இலட்சம் ரூபாய் தருவதாக கூறியதை ஏற்க மறுத்த உரிமையாளர், 1.5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கிராமப் பெயர் இங்குள்ள சாங்லி மாவட்டம் ஜாட் தாலுகாவில், பலரும், 'மட்ஜியல்' இன ஆடுகளை வளர்க்கின்றனர். செம்மறி ஆடுகளில் இருந்து வேறுபட்டுள்ள இவை உயரமானவை என்பதுடன், அதிக வளர்ச்சி விகிதம் உடையவை; இறைச்சி தரத்தில் மிக உயர்ந்தவை என, கருதப்படுகிறது.
இதனால், இவ்வகை ஆடுகளின் விலை, தலா, 5 இலட்சம் முதல், 10 இலட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இந்த வகை ஆடுகள் அதிகமிருக்கும் மட்ஜியல் கிராமத்தின் பெயரையே, அதற்கு வைத்துள்ளனர்.
சாங்லி மாவட்டம் அட்பாடி தாலுகாவில் வசிப்பவர் பாபு மெட்காரி. பண்ணை வைத்துள்ள இவர் வளர்க்கும், ஓர் ஆட்டின் பெயர் ‘மோடி’. சமீபத்தில், 70 இலட்சம் ரூபாய் விலை தருவதாக ஒருவர் கேட்டும், அதனை பாபு ஏற்கவில்லை.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: “இந்த ஆட்டின் உண்மையான பெயர் சர்ஜா. நரேந்திர மோடி, போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றவர். ‘சர்ஜாவின் ஆட்சி’ என் ஆட்டு மந்தையிலும், சர்ஜாவின் ஆட்சி தான் நடக்கிறது. இதனால் அதற்கு செல்லமாக மோடி என, பெயரிடப்பட்டது” என்றார்.
“இது மிக அதிர்ஷ்டகரமானது என்பதுடன், மதிப்பு மிக்க அதனை விற்பனை செய்ய விரும்பவில்லை. எனவே, 70 இலட்சம் ரூபாய்க்கு கேட்டவரிடம், 1.5 கோடி ரூபாய் என, கூறியதால் திரும்பி சென்றார். இந்த ஆடு மிக வசீகரமானது என்பதுடன், எனக்கும் என் குடும்பத்தினருக்கம் மிக செல்லமானது” என்றார்
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026