Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பிரேசில் அரசு விருந்து அழைப்பு காரணமாக சீன ஜனாதிபதி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2013-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த உயர்மட்ட வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) பல தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.
ஜூலை 6-7 திகதிகளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், சீனக் குழுவுக்கு ஜி ஜின்பிங்கின் நெருங்கிய உதவியாளரும், தற்போதைய சீனப் பிரதமருமான லீ கியாங் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையால் பிரேசில் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வா மே மாதம் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார் என்றும், சீன அதிபர் ரியோ மாநாட்டில் நேரில் கலந்துகொண்டு பதில் மரியாதையை செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் பிரேசிலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவின் முடிவால் தற்போது பிரேசில் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம்.
இதற்கு சீனாவோ, அதிபரின் வேறு பயண திட்டங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால், பிரேசில் அதிகாரிகள் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அரசு விருந்து அழைப்பு காரணமாக சீன அதிபர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோடியும், லூலாவும் நெருக்கமாக இருப்பது ஜி ஜின்பிங்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
30 Aug 2025