2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

"களுதர போம்புவல புஸ் கோட்டா" என்று அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளும் இரண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களும் அடங்குவர்.

சந்தேக நபர்களால் திருடப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள், பிரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் முக்கிய சந்தேக நபரிடமிருந்து 10,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .