Janu / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிள் ஒன்று உயர் மின்னழுத்த மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (10) இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்துக்கொண்டிந்த போது கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில் வைத்து சிறிய ரக லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026