2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜனவரி 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதேசத்துக்கு திரும்பும் முச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

படுகாயமடைந்த மோட்டார் வண்டியின் சாரதி, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய வெயங்கொட பகுதியைச் சேர்தவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .