2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யூ.என்.எச்.ஆர்.சியின் அமர்வு இன்று ஆரம்பம்: பதிலளிக்க இலங்கை தயார்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
(யூ.என்.எச்.ஆர்.சி) 33ஆவது அமர்வின்போது, இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் பேசப்படவுள்ளது.

ஜெனீவாவில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்த அமர்வின் போது, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா செயற்குழுவின் இலங்கை வருகை மீதான அறிக்கைகள் பற்றிப் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா செயற்குழுவிடம் அதன் அறிக்கையைச் செயற்படுத்தும் நோக்கில் ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், மேற்படி குழு, இலங்கைக்கு வந்ததையிட்டு, அரசாங்கம் மகிழ்ச்சியடைந்ததாக, 33ஆவது அமர்வுக்கு சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் கூறவுள்ளது.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான செயற்குழுவுடனான தனது செயற்பாடுகளை, நல்லிணக்க முயற்சியின் முக்கிய கூறாகக் கருதுவதாகவும் அரசாங்கம் அதில் கூறவுள்ளது. இதற்கமைய, இலங்கை அரசாங்கமானது, இந்தச் செயற்குழுவுடன் நெருக்கமாகச் செயற்படும். அரசாங்கமானது, செயற்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் நோக்கில் ஆராய்ந்து வருகின்றது.

வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி முறைமை, வழக்கு நடத்தல் சேவைகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தில் நம்பிக்கை இல்லையென இக்குழு குறிப்பிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தண்டனை வழங்கப்படாத பழைய போக்கு இப்போதும் உள்ளது. காணாமல் போனோரின் கதி, அவர்கள் உள்ள இடம் ஆகியவற்றை அறிய, போதிய முயற்சி இப்போது தேவை.

இவற்றுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதும் உண்மை அறிதலுக்கான உத்தரவாதம், பரிகாரம் என்பவை தொடர்பில் முயற்சிகள் தேவை என இந்தக் குழு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X