Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 20 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வழிப்படுத்தல் குழுவுக்கு எழுத்துமூலமான யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை, இம்மாதம் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்று, வழிப்படுத்தல் குழுவின் செயலாளரும் பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியும் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமுமான நெலி இசவல தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்பு பேரவையின் வழிப்படுத்தல் குழு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதேவேளை, உபகுழுக்கள் தங்களின் கூட்டங்களை அடுத்த வாரம் நடத்துவதற்கும் அதன் அறிக்கையை வழிப்படுத்தல் குழுவுக்கு மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிப்பதற்கு கலந்துறையாடியுள்ளது.
இது மட்டுமன்றி வழிப்படுத்தல் குழுவானது, பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் பங்குபற்றுவதற்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதேவேளை, வழிப்படுத்தல் குழு, ஜூன் மாதம் 7ஆம் திகதியன்று மீண்டும் கூடவிருக்கின்றது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago