2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யுத்த அழிவுகளுக்கு புலிகளே பொறுப்பு: சஜித்

Thipaan   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் போது வீடுகள் அழிவதற்கு, இராணுவம் காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதை, வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மறுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வீடமைப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  இராணுவம், மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டது எனவும் எல்.ரீ.ரீ.ஈ தான் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம், மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது, அவர்களின் சமயம் மற்றும் இனம் என்பவற்றை கருத்திலெடுக்கமாட்டாதென அவர் கூறினார். ஜனவரி 8 அமைதிப்புரட்சியின் ஒருவருடப்பூர்த்தி, பெரும் ஆரவாரமாகக் கொண்டாடப்படமாட்டாதெனவும், பொதுமக்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் கொண்டாடப்படும் எனவும் கூறினார்.

யுத்தக்காலத்தில், எல்.ரீ.ரீ.ஈ, சொத்துக்களுக்குப் பாரிய சேதம் ஏற்படுத்தியதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தகக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X