2025 மே 17, சனிக்கிழமை

யால தேசியப்பூங்காவுக்கு இன்று முதல் பூட்டு

Gavitha   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால தேசியப்பூங்கா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாகவே குறித்த பூங்கா மூடப்படவுள்ளது.

காலநிலை காரணமாக மிருகங்களின் இயற்கை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பதுக்கும் அவற்றை பாதுகாப்பதுக்கும், பூங்காவின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குமாகவே இந்த பூங்கா தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இந்த ஒரு மாதக்காலப்பகுதியினுள், மிருகங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக பூங்காவுக்கும் சிறிய கிணறுகளும் ஏரிகளும் அமைக்கப்படவுள்ளதாக  அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .