2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

யோஷிதவை அனுப்புவதா? இல்லையா? புதனன்று தீர்ப்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு, எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படுமென, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று வியாழக்கிழமை (22) அறிவித்தது.

யோஷித ராஜபக்ஷ சார்பாக, அவரது சட்டத்தரணிகளால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (20), இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அவர் செல்ல எதிர்பார்க்கும் நாடு மற்றும் வெளிநாடு செல்வதற்கான காரணம் தொடர்பில், அந்த மனுவில் அன்றைய தினம, குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பான விசாரண,இ நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போதுஇ தன்னுடைய பாதத்தில் உபாதை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலைக்குச் செல்ல எதிர்ப்பார்ப்பதாகவும் யோஷித ராஜபக்ஷவினால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ள றக்பி விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர், தன்னுடைய பாத உபாதைக்கு சிகிச்சைப் பெற வேண்டுமெனவும் மன்றில் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான அனுமதிக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக, மன்றில் ஆஜராகியிருந்த சட்ட மா அதிபர் தெரிவித்தார். இந்நிலையில், யோஷிதவின் கோரிக்கை மனு தொடர்பான தீர்ப்பை 28ஆம் திகதியன்று வழங்குவதாக, கொழம்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ அறிவித்தார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதிச் சலவைப்படுத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில், யோஷிதவின் வெளிநாட்டுப் பயணத்துக்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .