2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

”யார் இணைவார்கள் என்பது எங்களுக்கு கவலையில்லை”

Simrith   / 2024 ஏப்ரல் 16 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்தி, நிலையான நாட்டை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது.

“நாங்கள் நினைப்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட கூட்டு முயற்சி. எனவே இலங்கையை நிலையான நாடாக மாற்றுவதற்கான பொதுவான இலக்கை அடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கைகோர்ப்பதை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தேசத்தின் நலனுக்காக கைகோர்க்க தயாராக இருக்கும் வரை எங்களுடன் யார் இணைவார்கள் என்பது எங்களுக்கு கவலையில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தமது கட்சித் தலைவருடன் முரண்பட்டுள்ள சமகி ஜன பலவேகய (SJB) யில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். 

"இந்த எம்.பி.க்கள் எஸ்.ஜே.பி தலைமையுடன் முரண்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் SJB மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) விவாதங்கள் மீதான அவர்களின் தற்போதைய நாடகத்தை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

"SJB மற்றும் NPP ஆகிய இரண்டும் நெருக்கடியின் போது அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான சலுகைகளை நிராகரித்ததால், பொருளாதாரம் பற்றி விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை" என்று ரங்கே பண்டார கூறினார்.

2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இரு கட்சிகளும் தங்கள் விவாதங்களை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X