2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

யார்? பொறுப்பு

Freelancer   / 2026 ஜனவரி 07 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 ஆம் தரம் ஆங்கில பாடநூலில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை  நீக்குவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அரச நிதி  முறைகேடு குற்றமில்லையா? இதற்குப்   பொறுப்புக் கூறுவது யார் ? என பொதுஜன பெரமுனவின் எம்.பி. நாமல் ராஜபக்‌ஷ, செவ்வாய்க்கிழமை (06) அன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால்  வீட்டின் கூரையில் பொருத்தப்பட்ட தகரம் ஒன்று பறந்துச் சென்றால் அதற்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்தார். 

ஆனால், வழங்குவதாக அறிவித்த  நிவாரணங்கள்  எதுவும்  இன்று வரையில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை.   நிவாரண  வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. ஆகவே  வழங்கிய வாக்குறுதிகள்  பொய் என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட  சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட   ஒருவர் அரச  தரப்பில் உள்ளார் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .