Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூலை 06 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
26 வயது திருமணமாகாத யுவதியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயதான சந்தேகநபரை 19 ஆம் திகதி வரை தெஹியோவிட்டவில் உள்ள முருத்தெட்டு போல சிறுவர்கள் இல்லத்தில் பாதுகாப்பான காவலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணலியனகே உத்தரவிட்டார்.
ஹெனியாய, தேவிபஹலவில் உள்ள தெபுலாங்கொட தோட்டத்தில் தற்காலிகமாக வசித்து வந்த குமாரவேலு ஆகாஷ் குமார என்பவரே கைது செய்யப்பட்டார்.
வேலை முடித்து குருவிட்ட, தேவிபஹல-ஹென்னாய வீதியில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹெனியாய, லியனார்ச்சிலவை நிரந்தரமாக வசிக்கும் ஷாலிகா மதுஷானி (26) என்ற யுவதியே ஜூலை 2ஆம் திகதி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நாய்கள் வழங்கிய துப்புகளின் அடிப்படையில் சந்தேக நபர் குருவிட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர், 4 ஆம் திகதி காலை கொலை நடந்த இடத்திற்கு அருகில், இறந்த யுவதியின் வசம் இருந்த நெக்லஸ், மொபைல் போன், அடையாள அட்டை மற்றும் தனிப்பட்ட உடைமைகள் அடங்கிய கைப்பையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இறந்த பெண் வீதியில் இருந்து சுமார் பதினைந்து அடி தூரத்தில் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், சந்தேக நபர் முகத்தை மறைக்க கொண்டு வந்த கருப்பு கைக்குட்டையையும் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து மீட்டுள்ளனார்.
இரத்தினபுரி போதனா பொது மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் டாக்டர் உத்பலா அட்டிகல்லே உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள், இறந்தவர் சந்தேக நபரிடமிருந்து தப்பிக்க போராடியதையும், சந்தேக நபரின் மார்பை இறந்தவர் கடித்ததையும், போராட்டத்தின் போது சந்தேக நபரின் உடலில் நகங்களால் கீறல்கள் இருந்ததையும் கவனித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்த நேரத்தில் அங்கிருந்த சிலர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விசாரணைகளைத் தடுக்கும் முயற்சியைத் தடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குருவிட்ட நகரில் உள்ள ஒரு கடையில் கடை உதவியாளராக இருந்தார். அவரது தாயும் சிறிய தந்தையும் தெபுலங்கொடவத்தேயில் பணிபுரிந்தனர். சந்தேக நபர் வாரத்திற்கு ஒரு முறை தனது தாயின் வீட்டிற்குச் செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
, இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் கழுத்தில் காகித கட்டர் போன்ற கூர்மையான கருவியால் வெட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல காயங்கள் காணப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago