Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2025 மே 02 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்
நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்கு சம்பவ தினம் இரவு சென்றவர் காலையாகியும் வீடு திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
3 hours ago