2025 மே 15, வியாழக்கிழமை

யானைக்கு வெடி வீசியவர் விரல்களை இழந்தார்

Simrith   / 2023 ஜூலை 11 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை யானைகள் துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளன. 

இதனை தடுக்க குறித்த யானைகளுக்கு வெடி வீசிய ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வவுனியா கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளன. அப்போது யானைக்கூட்டத்திற்கு வெடி வீசியவரின் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .