Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
அநுராதபுரம்- கலாஓயா பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்ட காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நேற்று மாலை (30) பிடிப்பதற்கு முயற்சி செய்த வேளை குறித்த யானை அதிகாரி ஒருவரைத் தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்தக் காட்டு யானையை ப் பிடித்து ஹொரொவபத்தனை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பதற்காக
முயற்சி செய்த வேளையிலேயே , குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புத்தளம் ஜயபிம மாவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அஷோக வெந்தகடு என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவர் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நிலையில் இறுதியாக வில்பத்து கலா ஓயா வட்டார உதவிப் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago