Freelancer / 2025 மார்ச் 01 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலை காரணமாக யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகளில் உடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago