2025 மே 15, வியாழக்கிழமை

யாழில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, யாழ்.மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர். 

அதேவேளை, புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .