Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 23 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இளைஞன் உயிரிழந்தது, யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.
அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி, உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. R
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago