2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘யாழ் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்’

Editorial   / 2019 மே 14 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்ட மக்கள், இன மத வேறுபாடின்றி, பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து, மாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதாக, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிர்வரும் காலங்களிலும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சகல முக்கியமான இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது வேறு சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, அருகிலுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .