2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ரூ. 25 கோடி பெறுமதியான பழுதடைந்த அரிசி கண்டுபிடிப்பு

George   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி புஸ்ஸ பிரதேசத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான பொன்னி அரிசி களஞ்சியசாலை, சுகாதார வைத்திய அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்று சனிக்கிழமை குறித்த களஞ்சியசாலையை சுகாதார வைத்திய அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கிருந்த அரிசி பாவனைக்கு உதவாத வகையில் பழுதடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அரிசி தொடர்பில் அரச பகுப்பாய்வாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரிசி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பழுதடைந்துள்ள அரிசியின் பெறுமதி 25 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இந்த அரிசி பின்னர், திஸ்ஸ களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X