2025 மே 21, புதன்கிழமை

ராஜிதவிடம் வாக்குமூலம்: சம்பிக்கவை விசாரிக்க முடிவு

Kanagaraj   / 2015 நவம்பர் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவன்ட் காட் தலைவரிடம் பணம் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விசாரணை நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவன்ட் காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியிடமிருந்து நிதி பெற்றுக்கொண்டாதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், உண்மை எது, பொய் எது என்பதனை கண்டறியுமாறு அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை கையளித்தனர்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ள இரகசிய பொலிஸார், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X