2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ரிவோல்வர் வேண்டாம்; பிஸ்டல்தான் வேணுமாம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போல 9 எம்.எம். வகையான பிஸ்டல் வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவாகியுள்ள எம்.பி.க்களில் 35 பேர் கோரியுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குப் புதிதாக தெரிவாகியுள்ள 33 உறுப்பினர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள், நாடாளுமன்ற சேவைகள் காரியாலயத்துக்கு எழுத்து மூல கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்.

தங்களுக்கு வழக்கவிருக்கின்ற 03.8 வகையைச் சேர்ந்த ரிவோல்வர் பழைய வகையைச் சேர்ந்ததாகும். எனவே, அந்த பழைய ரிவோல்வர் வேண்டாம். 9 எம்.எம் வகையான பிஸ்டல்தான் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இம்முறை நாடாளுமன்றத்துக்குப் புதிதாக 61 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அதில், 35 புதிய உறுப்பினர்களே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுடைய பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டும், தங்களுடைய வரப்பிரசாதங்களின் அடிப்படையிலுமே இவ்வாறான கோரிக்கையை விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும், 03.8 வகையைச்சேர்ந்த ரிவோல்வர் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயக காரியாலயம், அவர்களுக்கு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .