2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரக்னா லங்கா விவகாரம்: முன்னாள் பொதுமுகாமையாளருக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சி சொன்னார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு எதிராக, கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மீதிருந்த அளவற்ற கௌரவத்தினால் உண்மையைக் கூறவில்லை என்று முன்னாள் பொது முகாமையாளர், ஆணைக்குழு முன்னிலையில் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X