2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, அருந்திக பெர்னாண்டோ செய்துள்ள முறைபாடு குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்துக்குள் வைத்து கத்தியைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ செய்த முறைபாடு தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெலிக்கடை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள வெலிக்கடை பொலிஸார், கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்ட போது, ரஞ்சன் ராமநாயக்க கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாகவும் இதன்போது அவருக்கருகில் பாலித தெவரப்பெரும நின்றதாகவும் அருந்திகவின் முறைபாட்டில் சொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .