2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரட்ணசிறியின் வீடு சம்பந்தருக்கு?

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிராஜ் ஹஸீம்

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.   

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று, இதுவரை வழங்கப்படவில்லை.  

அவர், கொழும்பிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிடம் விசாரித்த போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிசொகுசு வாய்ந்த வீடுகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுவிட்டன. வெகு விரைவில், அவருக்கான வீடொன்று ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்று, அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர்.  

இந்நிலையிலேயே, மறைந்த முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த, கொழும்பு 07, விஜேராம வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை, அவரது இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .