2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ரணில் கைது : நீதவான் அதிரடி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதன்போது கோட்டை நீதவான் தமது அதிருப்தியை மன்றில் வெளியிட்டார்.

தனது பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறும் நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X