2025 ஜூலை 23, புதன்கிழமை

ரணிலின் வீட்டுக்குத் தீ;ஆஜராகத் தவறிய துணை அமைச்சர்

Simrith   / 2025 மார்ச் 27 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை 09, 2022 அன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை அழித்த தாக்குதல் மற்றும் தீயணைப்புப் படையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக விசாரணையில் சந்தேகிக்கப்படும் இளைஞர் விவகார துணை அமைச்சர் எரங்க குணசேகர, மார்ச் 26 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன் முன்னிலையாகத் தவறிவிட்டார்.

உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குணசேகரனால் ஆஜராக முடியவில்லை என்று அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் பல சந்தேக நபர்களும் முன்னிலையாக இயலாமையைக் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த நீதவான் நான்கு சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்ததுடன், அடுத்த விசாரணையின் போது குணசேகரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.ரங்கா, அன்ட்ரூ ஐவோன் பெரேரா, ரைகம் பதரகே மஞ்சு, வெத்தமுனிகே ஷெரின் விக்கிரமசிங்க, தில்ருக் மதுஷங்க, அஷான் சந்தீப, அன்வர் அலி மற்றும் கோரலகே இந்திக பிரசாத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .