Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூன் 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் கிடைத்தது. அப்பட்டியல் நிரப்பப்படாமலே இருந்தது. இந்நிலையிலேயே, கட்சியின் தலைவரையே நியமிப்பதற்கு செயற்குழு கடந்தவாரம் தீர்மானித்திருந்தது.
அதனடிப்படையிலேயே, எதிர்வரும் 22ஆம் திகதியன்று அவர், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு எதிரணியில் முன்வரிசையில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
பாராளுமன்றத்துக்கு மூத்த உறுப்பினர், கட்சியொன்றின் தலைவர் என்றவகையில், முன்வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. அந்தவகையில், ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அருகிலேயே ஆசனம் ஒதுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago