2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரணிலை சந்தித்த பின் சஜித் கூறியது என்ன?

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக புதிய மெகசின் சிறைச்சாலைக்கு இன்று (23) காலை சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வௌியிட்டார். 

நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார். 

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார். 

சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம் என்றும், சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X