2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரணிலை நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூற முடியாது

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூறமுடியாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

நாடாளுமன்றத்தில்  ரணில் விக்கிரமசிங்கவுக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. எனவே அவரை பிரதமராக நியமிக்க முடியாதென ஜனாதிபதி கூறமுடியாது.

நாம் ரணில் விக்கிரமசிங்கவையே தலைவராக கருதுகிறோம்.எனவே யார் என்னக் கூறினாலும் சட்டபூர்வமான தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என, நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .