Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 29 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்ட தேசிய அரசாங்கத்தில், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே, அனைத்து அதிகாரங்களையும் பொறுப்பேற்றுக் கொண்டு செயற்பட்டார் என்று குற்றஞ்சாட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அவ்வாட்சியில், பொம்மை போன்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டாரெனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.
இலங்கையில், ஜனாதிபதித் தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அதற்கு 2 நாள்கள் முன்னதாக. 6ஆம் திகதி, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில், அப்போது பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை அனுப்பி, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தன்னைப் பிரதமராகத் தெரிவுசெய்யும் படியும், அனைத்து அதிகாரங்களும் தனக்குக் கீழ் இருப்பது போன்ற வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுமாறும் கோரி, கடிதமொன்றை அனுப்பியிருந்தார் என, தயாசிறி எம்.பி குற்றஞ்சாட்டினார்.
எனினும், அவ்வாறான கடிதம் அனுப்பப்பட்டமைக்கான எந்தவோர் ஆதாரத்தையும், தயாசிறி எம்.பி வெளிப்படுத்தியிருக்கவில்லை.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பெயருக்காக, ஜனாதிபதி ஆசனத்தில் மைத்திரிபால சிறிசேனவை அமரவைப்பது தான், ரணிலின் எண்ணமாக இருந்தது எனவும், சகல அதிகாரங்களும் ஒரே இடத்தில் இருந்தமையால், அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள் கூட, ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் குழு ஊடாகவே எடுக்கப்பட்டன எனவும் குற்றஞ்சாட்டினார்.
(படப்பிடிப்பு: நிசால் பதுகே)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago