2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ரணில் - மஹிந்த சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இன்று முற்பகல் வேளையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றபோதிலும், என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விவரம் இதுவரை வௌியிடப்படவில்லை.

இச்சந்திப்பை முடித்துக்கொண்டு - பிரதமர், சபாநாயகர், விசேட விருந்தினர் வரும் வாயிலைத்தவிர்த்து நாடாளுமன்ற
உறுப்பினர்கள் வெளியேறும் வாயிலூடாகவே நாடாளுமன்றத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ஷ வெளியேறியதாகவும் அறியமுடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .