2024 மே 21, செவ்வாய்க்கிழமை

ரத்துபஸ்வல தீர்ப்பு ஒத்திவைப்பு

Freelancer   / 2024 மே 01 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுத்தமான குடிநீருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ பிரிகேடியர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான தீர்ப்பை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்க கம்பஹா விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (30)  தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு   செவ்வாய்க்கிழமை (30)  எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படுமென  கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி  சஹான் மாபா பண்டார அறிவித்தார். 

இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ பிரிகேடியர் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூன்று இராணுவத்தினரையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி கட்டளையிட்டார்.   

தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படிக்கோரி, வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியில் இறங்கி, 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் மீதே, பாதுகாப்பு தரப்பினரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .