Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட நீதிபதி டீ.எச்.ரூவான், இன்று உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரதுபஸ்வெல பிரதேச பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில், நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. பிரிகேடியர் அனுர தேசப்பிரிய, லலித் கிரே உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவே, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago